அஜித்தின் துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸுக்கு கைமாறியது ஏன்?
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் ஓடிடி உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து படத்தின் தலைப்பு உள்ளிட்ட எந்தவொரு அப்டேட்டும் வெளியாக வில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படத்தின் டைட்டில் ‘துணிவு’ என்று அறிவிக்கப்பட்டது. சமீபகாலமாக அஜித்தின் பட பெயர்கள் வீரம், விவேகம், வலிமை என வைக்கப்பட்டு வரும் நிலையில் கிட்டத்தட்ட அதே பொருள் கொண்ட துணிவு என்ற டைட்டில் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக ஜி நிறுவனம் உள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணம் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரோடு ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதுதான் என சொல்லப்படுகிறது. இதை உறுதிப் படுத்துவது போல படத்தின் சேட்டிலைட் உரிமத்தையும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை ஜி தமிழ் நிறுவனம் கைப்பற்றியது.