டி 20 உலகக்கோப்பையில் இருந்து முக்கிய வீரர் விலகல்… இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!

0
87

டி 20 உலகக்கோப்பையில் இருந்து முக்கிய வீரர் விலகல்… இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அக்டோபர் மாதம் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அவர் பிட்னெஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்கா அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. அதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஜாஸ்ப்ரீத் பூம்ரா விளையாடவில்லை. அவர் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுவதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறி இருந்தார்.

காயம் காரணமாக பும்ரா ஆசியக் கோப்பை தொடரில் விளையாடவில்லை. இதனால் இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனம் அடைந்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் பூம்ரா மீண்டும் அணிக்கு ஆஸ்திரேலியா தொடரில் அழைக்கப்பட்டார். ஆனால் அவர் அந்த தொடரில் சிறப்பாக பந்துவீசவில்லை.

இப்போது மறுபடியும் காயம் என்று டி 20 உலகக்கோப்பை தொடரில் இருந்தே விலகியுள்ளார். இதனால் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமடைந்துள்ளது. அவருக்கு பதிலாக ஸ்டாண்ட்பை வீரராக இருக்கும் ஷமி அணிக்கு அழைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.