சானா: இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏமன் நாட்டின் சானா விமான நிலையத்தில் WHO தலைவர்டெட்ரோஸ் நூலிழையில் உயிர் தப்பினார்.
இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு துணையாக நிற்கும் நாடுகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று ஏமன் மீது தற்போது விமான படைகள் கொண்டு வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஏமன் நாட்டில் உள்ள துறைமுகங்கள் மற்றும் பேருந்து நிலையம் அதனை தொடர்ந்து விமான நிலையங்களிலும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் 100 கும் அதிகமான போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தீவிர தாக்குதலில் ஏமனில் உள்ள சானா விமான நிலையத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதொனம் இருந்துள்ளார். இந்த கொடூர தாக்குதல் நடைபெற்று கொண்டிருக்கும்போது இருந்து நூலிழையில் தப்பியுள்ளார்.
இதுகுறித்து x வலைதளத்தில் செய்திகள் வெளியாகின அதில் வான்வழி தாக்குதல் நடைபெற்ற அந்த நேரத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் உயிர் தப்பியது மற்றும் அங்கு இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஐநா மற்றும் WHO எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது அந்த முக்கிய தலைவர் அதிலிருந்து உயிர் தப்பியுள்ளார்.