இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் தற்போது நீதிமன்றத்திற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது அது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் காசாவுக்கு சென்று பேட்டி ஒன்றை அளித்தார் அதில் ஹமாஸ் கதை முடிந்தது இனிமேல் அவர்கள் எந்த நிர்வாகமும் செய்ய முடியாது அவர்களின் சகாப்தம் அவ்வளவுதான் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது பிடிவாரண்ட் க்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது யூத எதிர்ப்பு ட்ரேஃபஷூ க்கு நடந்தது போல இந்த முறை விசாரணை நடந்துள்ளது எனவும். 1894-1904 காலகட்டத்தில் நடந்த விசாரணையில் ட்ரேஃபஷூ மீது தவறாக குற்றம் சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார். ஆனால் நீண்ட நாள் விசாரணைக்கு பிறகுதான் அவர் குற்றவாளி இல்லை என்பது தெரிந்தது. அதுபோல தான் தற்போது நடக்கிறது என்றும் கூறினார்.
மேலும் பல விஷயங்களில் சர்வதேச நீதிமன்றம் அமைதி காப்பது என் குறிப்பாக ஈரான்,சிரியா, ஏமனில் நடந்த போர் குற்றங்கள் குறித்தும், இஸ்ரேல் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்த போதும், ஆண்களின் தலையை துண்டித்த போதும், குழந்தைகளை கொடூரமாக கொன்ற போது ஹமாஸ் பயங்கரவாதிகளை சர்வதேச நீதிமன்றம் ஏதும் செய்ய வில்லை என்?
குறிப்பாக நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன், சர்வதேச நீதிமன்றமும் சரி அதன் முடிவுகளை ஏற்பவர்களும் சரி கடுமையான விளைவுகளை காண்பீர்கள் என்றும்,உங்கள் எதிரி எங்கள் எதிரி அதனால் எங்கள் வெற்றி உலகிற்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.