உடலில் ஏற்படும் ஓராயிரம் நோய்களையும் சரி செய்யும்.. இந்த மிளகாயை கண்டால் விட்டுவிடாதீர்கள்!!
நாம் உண்ணும் காய்கறிகளில் பல சத்துக்கள் உள்ளது. நமது உடலில் ஏற்படும் வியாதிகளுக்கும் மருந்தாக காய்கறிகளே இருக்கிறது. இவர் இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவின் வழி வந்த குடைமிளகாயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இந்த குடைமிளகையானது மஞ்சள் சிகப்பு பச்சை என்ற மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.
குறிப்பாக இதனை ஃபாஸ்ட் ஃபுட் அனைத்திலும் குடை மிளகாய் இல்லாமல் இருக்காது. ஆனால் பெரும்பாரியாக வீடுகளில் இதனை உபயோகிப்பது குறைவுதான். குடமிளகாயை அதிக அளவு நாம் உணவில் எடுத்துக் கொள்வதால் புற்றுநோய் வருவதற்கான காரணிகளை தடுக்க உதவும். இதில் அதிக அளவு விட்டமின் ஏ உள்ளது. மேற்கொண்டு இதில் கண்ணின் ரெட்டினா செல்களை மேம்படுத்துவதில் இதன் பங்கு அதிகம்.
வயது மூப்பு காரணமாக ஏற்படும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைக்கும் இந்த குடைமிளகாய் நல்ல தீர்வளிக்கும். சிவப்பு நிறத்தில் இருக்கும் குடைமிளகாயும் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் குறைப்பதோடு இதயத்திற்கும் மிகவும் நல்லது. அனிமியா பிரச்சனை உள்ளவர்கள் அதிகளவில் இந்த குடைமிளகாயை எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிகளவு விட்டமின் சி சத்து உள்ளது.
மேற்கொண்டு ரத்த ஓட்டம் மற்றும் இதயத்துடிப்பை சீராக வைக்கவும் உதவும். உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமென்றால் கலோரிகள் குறைந்த அளவிலான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் குடைமிளகாய் உள்ளது. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
மேற்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தி மல சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் குடமிளகாய் சாப்பிடுவதால் நல்ல மாற்றத்தை காணலாம். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.