நீங்கள் பல் துலுக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட் எந்த வகையைச் சார்ந்தது!! என்னது இதில் இத்தனை வகை உள்ளதா!!? இது தெரியாம போச்சே!!

Photo of author

By Divya

நீங்கள் பல் துலுக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட் எந்த வகையைச் சார்ந்தது!! என்னது இதில் இத்தனை வகை உள்ளதா!!? இது தெரியாம போச்சே!!

நம் உடலில் உள்ள முக்கிய உறுப்பு பல். உணவுப் பொருட்களை அரைத்து உடலுக்கு அனுப்பி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நாம் உண்ணும் உணவை உடனே விழுங்காமல் பற்களால் நன்கு அரைத்து விழுங்க வேண்டும். அப்பொழுது தான் உணவுக் குழாய் சீராக செயல்படும்.

அதேபோல் நம் முக அழகை கூட்டுவதில் பற்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பல் இல்லாவிட்டால் நாம் பேசும் வார்த்தை தெளிவாக இருக்காது. இதனால் தான் “பல்லு போனா, சொல்லு போச்சு” என்ற பழமொழியை பெரியவர்கள் அன்றே சொல்லி இருக்கிறார்கள்.

பல் இல்லாவிட்டால் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடும். காரணம் பற்களால் மென்று விழுங்கப்படும் உணவு மட்டுமே செரிக்கும். இல்லாவிட்டால் ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல். குடல் தொடர்பான பாதிப்பு என்று உடலில் பல வித பாதிப்புகள் உருவாகி விடும்.

இப்படி உடல் ஆரோக்கியத்திற்கு ஆணி வேராக திகழும் இந்த பல்லை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

அதற்கு தான் நாம் காலையில் எழுந்ததும் பல் துலக்குகிறோம். பற்களில் படிந்துள்ள அழுக்கு, உணவுத் துகள்கள், பாக்டீரியாக்கள் மற்றும் வாய் துர்நாற்றத்தை நீக்க பிரஷில் டூத் பேஸ்ட் சிறிதளவு வைத்து பற்களை தேய்த்து சுத்தம் செய்கிறோம்.

இப்படி பல் துலக்க உபயோகிக்கும் பேஸ்ட்டை பிராண்ட் பார்த்து மட்டுமே வாங்கி யூஸ் பண்ணும் நாம் அதன் தன்மை குறித்து தெரிந்து கொள்வதில்லை.

எந்த பிராண்ட் டூத் பேஸ்டாக இருந்தாலும் அதன் பின்னால் கொடுக்கப்பட்டிருக்கும் நிறத்தை கவனிப்பதில்லை.

பொதுவாக டூத் பேஸ்ட் என்று எடுத்து கொண்டால் அதில் கருப்பு, சிவப்பு, நீலம், பச்சை 4 வகைகள் இருக்கும். இந்த கலர் குறியீடு டூத் பேஸ்டின் அடிபக்கத்தில் இருக்கும்.

கருப்பு நிறக் குறியீடு கொண்ட பேஸ்ட் :-

நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் கருப்பு நிறக் குறியீடு இருந்தால் அதை இப்பொழுதே தூக்கி வீசவும். காரணம் அவை பல் துலக்க உகந்த பேஸ்ட் அல்ல. இந்த கருப்பு நிறக் குறியீடு கொண்ட பேஸ்ட் அதிக இராசயனங்களால் ஆனது. இது பற்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய பேஸ்ட் ஆகும்.

சிவப்பு நிறக் குறியீடு கொண்ட பேஸ்ட்:-

இந்த சிவப்பு நிறக் குறியீடு கொண்ட பேஸ்ட் இயற்கை பொருட்கள் மற்றும் இரசாயனம்என இரண்டையும் கலந்து தயாரிக்க கூடிய பேஸ்ட் வகை ஆகும். இது கருப்பு நிறக் குறியீடு கொண்ட பேஸ்டை காட்டிலும் ஆபத்து சற்று குறைவான பேஸ்ட் வகை தான்.

நீல நிறக் குறியீடு கொண்ட பேஸ்ட்:-

இந்த பேஸ்ட் பற்களுக்கு பாதுகாப்பானவை தான். இதில் ஆபத்து நிறைந்த ரசாயனங்கள் இருக்காது. எனவே இந்த வகை பேஸ்டை உபயோகிக்கலாம்.

பச்சை நிறக் குறியீடு கொண்ட பேஸ்ட்:-

இந்த பேஸ்ட் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கபடுபவை ஆகும். இந்த பச்சை நிறக் குறியீடு கொண்ட போஸ்ட்டால் பற்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இதை உபயோகித்து பல் துலக்குவதால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.