ஒரு பைசா கூட செலவில்லை!!சர்க்கரை நோயை அடியோடு நீக்க ஈஸி டிப்ஸ்!!
ஒரு பைசா கூட செலவில்லாமல் நம் உடலில் இருக்கும் சர்க்கரை நோயை சரி செய்ய எளிமையான வீட்டு வைத்தியத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்தை தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் இரத்தத்தில் அள்ள சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
தேவையான பொருட்கள்
* கொய்யா இலை
* கருஞ்சீரகம்
* ஆவாரம் பூ பொடி
* வெந்தயம்
சர்க்கரை அளவை குறைக்க உதவும் மருந்தை தயார் செய்யும் முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடாக்கவும். பிறகு இதில் எடுத்து வைத்துள்ள கொய்யா இலைகளை சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதில் ஒரு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதில் ஆவாரம் பூ பொடியை சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதில் ஊறவைத்துள்ள வெந்தயத்தை இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளவும். இதை நன்கு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்களில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அந்த நீரில் இறங்கும் வரை இதை கொதிக்க வைக்க வேண்டும். இனிப்புக்காக இதில் தேன், நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், பனங்கற்கண்டு இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த மருந்தை தினமும் நீங்கள் குடித்து வந்தால் உடலில் இன்சுலின் அளவு அதிகமாக சுரந்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.