சினிமாவில் ஆரம்பகட்ட காலத்தில் நகைச்சுவை நடிகர்களின் எண்ணிக்கை சற்று குறைவு தான். அதில் முன்னணியாக திகழ்ந்தவர் வடிவேலு, அதற்கு பின் வந்தவர்கள் தான் விவேக் உள்ளிட்டோர். குறிப்பாக வடிவேலு கோவை சரளா என பலரது காம்போ பல படங்களிலும் ஹிட் அடித்துள்ளது. இவரது படங்களின் காமெடிகள் தற்போது வரை இணையத்தில் வைரலாகி ய வண்ணமாக தான் உள்ளது. அந்த வரிசையில் கிழக்கு சீமையிலே படம் இவருக்கு பெரிய பெயர் மற்றும் புகழை வாங்கி கொடுத்தது.
ஆனால் இதற்குப் பின்னணியில் மிகப்பெரிய கதை ஒன்று உள்ளது. முதலில் இந்த படத்திற்கு பெரிய பட்ஜெட் ஒன்றை தயாரிப்பாளர் தாணு ஒதுக்கியுள்ளார். இதனை அறிந்த வடிவேலு இந்த படத்திற்காக தனது சம்பளத்தையும் அதிகமாக கேட்டுள்ளார். ஆனால் இதனை பாரதிராஜாவிடம் கேட்டதால், நீ இவ்வளவு சம்பளத்திற்கு நடிக்கவே தேவை இல்லை என்று அசிங்கப்படுத்தி வெளியே அனுப்பி விட்டார். அப்படி வெளியேறியவரை அழைத்து சமாதானப்படுத்தி அவர் கேட்ட சம்பளத்தையும் தயாரிப்பாளர் கொடுத்துள்ளார்.
பாரதிராஜா முதலில் இவ்வளவு சம்பளத்திற்கு வடிவேலுவை வேண்டாம் என்று ஒதுக்கியிருந்தால் இவரது திரைப்பயணம் இந்த காலகட்டம் வரை பேசும் அளவிற்கு சென்றிருக்குமா என்பது சந்தேகம் தான். இவரின் திரை பயணத்தின் பெரிய திருப்பு முனையை தந்தது கிழக்கு சீமையிலே படம் தான். தயாரிப்பாளர் தாணு இவருக்கு உதவியதும் இயக்குனர் பாரதிராஜா நிராகரித்ததும் குறித்த டாக்கானது இணைவாசிகளிடையே பகிரப்பட்டு வருகிறது.