கோடிகணக்கில் உதவி கிடைத்த நிலையிலும் உயிரிழந்த பரிதாபம்!

0
154
It is a pity that millions of people lost their lives despite receiving help!
It is a pity that millions of people lost their lives despite receiving help!

கோடிகணக்கில் உதவி கிடைத்த நிலையிலும் உயிரிழந்த பரிதாபம்!

கடந்த சில மாதங்களுக்கு முன் மராட்டிய மாநிலம் புனேயில் சேர்ந்த ஒரு வயது சிறுமியின் பெயர் வேதிகா ஷிண்டே. இந்த சிறுமிக்கு முதுகு எலும்பு தசை சிதைவு நோய் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். சிறுமியை நோயிலிருந்து மீட்க ரூபாய் 16 கோடி மதிப்பிலான மருந்துகள் செலுத்த வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அது வெளிநாட்டில் கிடைக்கும் என்றும் கூறினார்கள்.

எனவே சிறுமியின் குடும்பத்தினர் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களிடம் உதவி வேண்டி கேட்டனர். பொதுமக்களும் தாராள மனதுடன் பல உதவிகள் கிடைக்கப்பெற்றது. பலரும் மனமுவந்து உதவி செய்ததால் சிறுமிக்கு தேவையான அந்த 16 கோடி ரூபாய் அளவில் ஊசி போடுவதற்காக பணம் சேர்ந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் சிறுமிக்கு அந்த ஊசி வெளிநாட்டில் இருந்து பெறப்பட்டு போடப்பட்டது.

இதனால் சிறுமி நோய் பாதிப்பில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு வர தொடங்கினாள். அவளது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன் காரணமாக அவள் குடும்பத்தினர் அவளை போசரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைகள் அளித்த நிலையிலும்  நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார். அவ்வளவு செலவு செய்து மருந்து செலுத்தப்பட்ட நிலையிலும், சிறுமி உயிரிழந்த சம்பவம் அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleகல்லூரி நாட்களில் எனக்கு இப்படி ஒரு பெயர் இருந்தது! நடிகர் பெருமிதம்!
Next articleஅருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை!