சாமியாடியவரையே தெய்வமே காப்பாற்ற மறந்த பரிதாபம்! சம்பவ இடத்திலேயே உயிரைத் துறந்த பக்தர்!
கடந்த மாதம் ஆடி என்பதால் பல கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்று காணப்படும்.ஏனென்றால் ஆடி மாதம் என்றாலே அம்மன்களுக்கான மாதம் என்றும் ஒரு பக்கம் கூறுவர்.பல கோவில்களில் ஆடி மாதம் பண்டிகை அன்று பூஜைகள் மிகவும் சிறப்புடன் நடாத்தப் படும். அவ்வாறு நடைபெறும் பண்டிகைகளில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் சாமி குத்தம் என்று கூறுவதும் நமது ஊரில் வழக்கமே.அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் தற்போது நடந்துள்ள சம்பவம் அனைவரையும் பதைபதைக்க செய்துள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் என்ற மாவட்டத்தின் சிங்கமலையில் கம்பமல்லையா என்ற கோவில் உள்ளது.
இந்த கோவிலில் வருடம் தோறும் சிறப்பு பூஜை நடைபெறும்.அப்போது கோவில் பூசாரிகள் அருள் வந்து ஆடி சாமிக்கு பூஜை செய்வர்.அவ்வாறு இந்த வருடமும் கம்பமல்லைய கோவிலில் வருடாந்திர பூஜை நடைபெற்றது. பூஜை ஆரம்பிக்கும் பொழுதே அக்கோவிலின் பூசாரிக்கு சாமி வந்துவிட்டது.அப்போது இவர் சாமி ஆடியபடியே பூஜை செய்துகொண்டு அவருக்கும் கீழ் இருந்த 40 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் இறங்கினார்.இவர் சாமியாடி அப்படியே இறங்கியதால் சுயநினைவின்றி இருந்த காரணத்தினாலும் அப்பளத்தில் கால் தவறி விழுந்துவிட்டார்.மேலும் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இவரை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இவர் திடீரென்று பள்ளத்தாக்கில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவத்தை கண்டு மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.சிலர் இச்செய்தியைக் கேட்டு சாமி ஆடிய வரையே சாமி காப்பாற்றவில்லை என்று விமர்சனம் செய்தும் வருகின்றன.மேலும் அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு அங்குள்ள பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பள்ளத்தில் உள்ள பூசாரி உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இவர் இறந்த காரணத்தினால் கம்பமல்லைலையா கோவிலில் பூஜைகள் அனைத்தும் தடை பற்று போய் நின்றது.