நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே எட்டாம் வகுப்பு படித்துவிட்டு டாக்டர் என்று சொல்லி மருத்துவம் பார்த்தது ஊர் மக்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே எட்டாம் வகுப்பு படித்த தங்கராஜ் என்பவர் தனது வீட்டிலேயே கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அங்கு உடல்நிலை சரியில்லாமல் வரும் மக்களுக்கு மாத்திரைகள் ஊசிகள் போட்டுள்ளார்.
டாக்டர்கான லெட்டர் பேடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த டாக்டர் செல்வத்தின் லெட்டர் பேடை அவர் அவருடைய போலி தனத்திற்கு உபயோகித்துள்ளார்.
இதை வைத்துக்கொண்டு சுற்று வட்டார மக்களுக்கு ஊசிகளை போடுவது மாத்திரைகளை வழங்குவது போன்ற செயல்களில் தங்கராஜ் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதைப்பற்றி எப்படியோ நாமக்கல் எம்பி சின்ராஜ்க்கு தகவல் சென்றுள்ளது. அவரை சோதித்துப் பார்க்க நினைத்த எம் பி சின்ராஜ் இரண்டு பேரை அனுப்பி வைத்துள்ளார். அங்கு சென்ற
அவர்களுக்கு டாக்டர் போலவே ஸ்டெதஸ்கோப்பை எடுத்து இதயத்துடிப்பு பார்த்து மாத்திரைகள் வழங்கியுள்ளார் தங்கராஜ். எம்பி சின்ராஜின் ஆதரவாளர்கள் தங்கராஜ் ஒரு டாக்டரை போலவே நடந்து கொள்வதாக அவரிடம் கூறி உள்ளனர்.
சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் எம்பி சின்ராஜ் தங்கராஜன் கிளினிக்குகள் சென்றுள்ளார். அங்கு சென்று சோதனை செய்த பொழுது தங்கராசு போலியான மருத்துவர் என்று கண்டறியப்பட்டது.
இதைப் பற்றி டாக்டர் செல்வம் அவர்களிடம் விசாரித்த பொழுது தங்கராஜ் 15 ஆண்டுகளுக்கு முன் உதவி பணியாளராக வேலை பார்த்தார். ஆனால் தனியாக கிளினிக் வைத்திருப்பது தெரியாது என கூறியுள்ளார்.
வெறும் 8 ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவர் என பொய் சொல்லி கிளினிக் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.