இனிமேல் பள்ளிகளில் இதற்கு முற்றிலும் தடை!! கல்வி கலாச்சார அமைப்பு பரிந்துரை!! 

0
114

இனிமேல் பள்ளிகளில் இதற்கு முற்றிலும் தடை!! கல்வி கலாச்சார அமைப்பு பரிந்துரை!! 

பள்ளிகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காக மற்றும் மாணவர்கள் ஆசிரியர்களின் நல்வாழ்விற்கும் துணையாக இருக்க வேண்டும்.

யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் யுனெஸ்கோ மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் உலகில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் ஃபோன்களை தடை செய்ய பரிந்துரை செய்துள்ளது.

பள்ளிகளில் ஸ்மார்ட் ஃபோன்களை மாணவர்கள் அதிகப்படியாக பயன்படுத்துவதால் கல்வியின் செயல் திறன் குறைவதற்கும், வகுப்பறையில் மோசமான செயல் திறனுக்கும் கட்டாயம் வழிவகுக்கும். மேலும் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடானது மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நல்வாழ்விற்காகவும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். அவற்றால் அவர்களுக்கு எப்போதும் தீங்கு நேரக்கூடாது,என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

தற்போது ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துவதன் மூலம் மாணவர்களின் செயல் திறன் வெகுவாக குறைந்துள்ளதாக பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட் போன் பள்ளிகளில் பயன்படுத்தக் கூடாது என பிரான்ஸ் நாடு முற்றிலும் தடை விதித்தது. அதேபோலவே இந்த மாதம் நெதர்லாந்து நாடும் பள்ளிகளில் ஸ்மார்ட் ஃபோன்களை இனிமேல் மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது என தடையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleவாங்கிய கடனை திருப்பி செலுத்தாத கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை!!
Next articleவரலாறு காணாத வீழ்ச்சியடைந்த நுகர்வோர் சந்தை!! ஆனால் இதன் விற்பனை மட்டும் அதிகரித்துள்ள ஆச்சர்யம்!!