பாத வெடிப்பு சரியாக மூன்று நாள் இதை தடவினால் போதும்!

Photo of author

By Kowsalya

பாத வெடிப்பு என்பது எந்த மாதிரியான வலியை கொடுக்கும் என்பது பாத வெடிப்பு உள்ளவர்களுக்கு தான் தெரியும். காலையில் எழுந்தவுடன் கால்களை கீழே வைக்கவே பயப்படுவார்கள். ஒரு சிலருக்கு அழகான ஹீல்ஸ் காலணி போட வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். பாத வெடிப்பு உள்ளவர்களால் ஹீல்ஸ் காலணி போட முடியாது. இது மாதிரி பல பிரச்சனைகளை உண்டாக்கும். இந்த பாதவெடிப்பிற்க்கு மூன்றே நாளில் இயற்கையான முறையில் தீர்வை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

1. விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன்

2. தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்

3. வேஸ்லின் கால்ஸ்பூன்

4. கற்பூரம்

செய்முறை:

1. முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் ஒரு ஸ்பூன் விளக்கு எண்ணெயை விடவும்.

3. பின் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

4. அதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு Vasline போடவும்.

5. கற்பூரத்தை எடுத்து பொடியாக்கி சேர்த்துக் கொள்ளவும்.

6. இதை நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

7. இப்பொழுது இதனை இரவு நேரங்களில் பாத வெடிப்புகள் மீது தடவ வேண்டும்.

8. தடவுவதற்கு முன் கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவி கொள்ளுங்கள்.

9. இரவு படுக்கப் போகும் முன் பாத வெடிப்புகள் மீது இதை தேய்த்து இரவு முழுவதும் விட்டு விடுங்கள்.

10. அலுவலகங்கள் செல்லும்பொழுதும் இதனை தடவிக் கொள்ளலாம் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.

தொடர்ந்து இதனை மூன்று நாட்கள் செய்து வர பாத வெடிப்புகளால் ஏற்படும் வலியும் பாத வெடிப்புகளும் மறையும்.