இனி ஆன்லைன் வகுப்புகளில் இது கட்டாயம்! இன்று முதல் அமல்!    

0
179
It is no longer mandatory in online classes! Effective from today!
It is no longer mandatory in online classes! Effective from today!

இனி ஆன்லைன் வகுப்புகளில் இது கட்டாயம்! இன்று முதல் அமல்!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையானது அதிகளவு மக்களை பாதிக்காமலிருக்க அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அவ்வாறு அமல்படுத்தியதில் மாணவர்கள் பள்ளிகளுக்கு  செல்லாமல் செல்போனில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் பயின்று வந்தனர்.இந்த ஆன்லைன் வகுப்புகளில் முழு சதவீதம் மாணவர்கள் பயில முடியா காரணத்தினால் தேர்வின்றி ஆள் பாஸ் செய்தனர்.

குறிப்பாக நமது தமிழகத்தில் 10 –ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றி ஆள் பாஸ் செய்தது இதுவே முதல் முறையாகும்.அதனையடுத்து தொற்று பரவலானது சற்று குறையவே மீண்டும் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.பள்ளிகளும் திறக்கப்பட்டது.அவ்வாறு மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து பாடம் பயின்றதில் ஆசிரியர்கள் உட்பட மாணவர்களுக்கும் கொரோனா தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது.மக்களும் அவ்வாறு முதலில் வெளியே செல்லும் போது போதுமான பாதுகாப்புடன் செயல்பட்டனர்.நாளடைவில் கொரோனாவை மறந்து பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட ஆரம்பித்துவிட்டனர்.அதன் விளைவாக கொரோனா தொற்றின் 2 வது அலை அதி வேகமாக பரவ ஆரம்பித்துவிட்டது.

அதிகள உயிர்களையும் இழக்க நேரிட்டது.மேற்கொண்டு மக்கள் பாதிக்கப்படாமலிருக்க மீண்டும் அந்தந்த மாநில முதல்வர்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.மீண்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வாறு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.நேரடி வகுப்புகளை போன்றே ஆன்லைன் வகுப்புகளுக்கும் ஆடை கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாட்டை அடுத்து மேற்கொண்டு பல நடவடிக்கைகள் அமலுக்கு வரும் என கூறுகின்றனர்.

Previous articleபெட்ரோல் டீசல் விலை! நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்!
Next articleசுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்த குட்நியூஸ்!