தமிழ்நாட்டில் தற்பொழுது பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் 13 நபர்களுக்கு அதிலும் வெவ்வேறு பிரிவினை சார்ந்த பலருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் அவர்களுடைய பெயர்களை அறிவிப்பின் மூலம் தெரிவித்திருந்தனர்.
இதில் நடிகர் அஜித்தினுடைய பெயரிடம்பெற்று இருப்பது அவருடைய ரசிகர்களை பெரிதளவில் மகிழ்ச்சியை அடைய செய்திருந்த நிலையில் தற்போது வலைப்பேச்சு அந்தணனின் பேச்சினால் அதிர்ந்து போய் உள்ளனர். நடிகர் அஜித் அவர்களுக்கு சிறந்த நடிகர் என்ற முறையில் இந்த விருதானது வழங்கப்பட்டதா ? அல்லது சிறந்த விளையாட்டு வீரர் என்ற முறையில் இந்த வருதானது வழங்கப்பட்டுள்ளதா? அல்லது சிறந்த மனிதாபிமானமிக்க மனிதராக இவர் திகழ்ந்தார் என்பதற்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளதா ? என பல்வேறு விதமான கேள்விகளை இவர் எழுப்பி இருக்கிறார்.
வலைப்பேச்சு அந்தணன் அவர்கள் நடிகர் அஜித் குறித்து பேசி இருப்பதாவது :-
தான் நடித்த படங்களுக்கான ப்ரமோஷன் விழாக்களில் கூட கலந்து கொள்ளாதா மனப்பான்மை உடைய அஜித் அவர்கள் பொதுவாகவே எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தன்னை வழிப்படையாக காட்டிக் கொள்வதில்லை. அப்படி இருக்கும் இவர் தற்பொழுது கார் ரேஸில் மூன்றாவது இடம் பிடித்த காரணத்திற்காக அனைத்து ஊடகத்திலும் பேட்டி அளித்து வருகிறார். இவர் சிறந்த விளையாட்டு வீரர் என்பதற்காக இவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டு இருக்கிறது என்றால் இவர் அதில் எந்த சாதனையையும் புரியவில்லை. காரணம் அந்த கார் ரேஸ்ங்கில் இவர் மூன்றாவது இடத்தை மட்டுமே பிடித்திருந்த நிலையில் அந்த ரேசிங்கில் கூட இவர் கலந்து கொள்ளவில்லை.
அவர் வேலை சிறந்த நடிகருக்கான விருதாக இந்த விருது இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றால் இவர் எந்த ஒரு படத்திற்காகவும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்ததோ அல்லது ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோ கிடையாது அப்படி இருக்க இவருக்கு சிறந்த நடிகருக்காக இந்த விருதை வழங்கி இருக்க முடியாது. மேலும் இவர் வெல்லம் வந்த காலங்களில் தன்னுடைய வீடுகளில் வீடற்ற ஏழைகளுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்தார் என்றும் 1000 ஏழைகளுக்கு கண் ஆப்ரேஷன் செய்வதற்காக உதவி புரிந்தார் என்று அவருடைய ரசிகர்கள் மட்டுமே கூறி வருவதாகவும் இதனால் எல்லாம் இவருக்கு சிறந்த மனிதநேயத்திற்கான விருது வழங்கப்பட முடியாது என்றோம் தெரிவித்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக, இவர் சினிமாவில் ஒரு உச்ச நடிகர் என்பதாலும் மற்றொரு உச்ச நடிகர் அரசியலில் நுழைந்துள்ளதால் இந்த உச்ச நடிகரை வைத்து அந்த உச்சநடிகரை எதிர்ப்பதற்காக ஆளும் கட்சியானது இந்த விருதை வழங்குகிறது என்றும் வலைப்பேச்சு அந்த அண்ணன் அவர்கள் தெரிவித்திருப்பது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.