சமைக்கும் போது பாமாயிலை இப்படி பயன்படுத்தினால் பெரும் ஆபத்து!! எச்சரிக்கை!!

Photo of author

By Divya

சமைக்கும் போது பாமாயிலை இப்படி பயன்படுத்தினால் பெரும் ஆபத்து!! எச்சரிக்கை!!

நம் நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் கண்டு வருவதால் ஏழை மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.விலைவாசி உயர்வால் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பொருட்களை வாங்க முடியாமல் விலை குறைவான தீங்கு தரக் கூடிய பொருட்களை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.

நம் அன்றாட சமையலுக்கு தேவைப்படும் முக்கிய பொருளான எண்ணையின் விலை அதிகரிப்பால் மலிவு விலையில் கிடைக்கின்ற பாமாயிலை சமைக்க,பொரிக்க பயன்படுத்தும் பழக்கம் மக்களிடத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது.ஆனால் பாமாயில் எண்ணெயை அதிகம் பயன்படுத்தி வந்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாம் கடைகளில் வாங்கி உண்ணும் பெரும்பாலான உணவுப்பொருட்கள் பாமாயில் எண்ணையில் தயாரிக்கப்பட்டவையாக தான் இருக்கின்றது.அதுவும் பலமுறை உணவு சமைக்க பயன்படுத்திய எண்ணையில் சமைத்த உணவுகளை தான் மக்கள் ருசித்து உண்டு வருகிறார்கள்.இப்படி ஒருமுறை பயன்படுத்திய பாமாயில் எண்ணெயை மீண்டும் மீண்டும் சமைக்க பயன்படுத்தும் பொழுது உணவு விஷமாக மாறுகின்றது.

பாமாயிலை அளவாக எடுத்துக் கொண்டால் ஆபத்தில்லை.ஆனால் தொடர்ந்து பயன்படுத்தினாலோ,மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணெயில் சமைத்த உணவை உட்கொண்டாலோ அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு தரக் கூடியவையாக மாறிவிடுகிறது.

பாமாயில் பித்தத்தை அதிகரிக்க கூடியவை என்பதினால் பித்த பாதிப்பு இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.பாமாயிலில் சமைத்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறு,வயிறு உபாதைகளை சந்திக்க நேரிடும்.

எனவே பாமாயிலை அளவாக பயன்படுத்துவது நல்லது.இல்லையேல் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய்,நல்லெண்ணெய்,ஆலிவ் ஆயில் போன்றவற்றை பயன்படுத்தலாம்.