இனி பள்ளி வாகனங்களில் கட்டாயம் இது இருக்க வேண்டும்! தமிழக அரசு பிறப்பித்த திடீர் உத்தரவு!
சமீபகாலமாக மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பற்ற முறையில் இயங்குவதாக புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. மேலும் சென்னையில் கடந்த மாதம் பள்ளியில் உள்ளே மாணவர் பின் இருப்பது தெரியாமல் பேருந்து இயக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதற்கடுத்ததாக இன்று திருத்தணியில் பள்ளி மாணவர்களை அழைத்து சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது.இதனால் மாணவர்களை அழைத்து சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக உள்ளே இருந்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நாளுக்கு நாள் இவ்வாறான சம்பவம் நடைபெறுவதால் தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இனி அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். குறைஞ்சபட்சம் ஒரு பேருந்திற்கு ஒரு கேமரா வீதம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதேபோல எச்சரிக்கை செய்யும் சென்சார் கருவியையும் அனைத்து பள்ளி பேருந்துகளிலும் பொறுத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது அனைத்தும் முறையாக இருக்குமாயின் விபத்துகள் குறைக்கப்படும். மேலும் மாணவர்கள் பாதுகாப்பு செல்ல இது ஏதுவானதாக அமையும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.