இவங்களாலதான் நான் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தேன்… – வனிதா கிருஷ்ண சந்திரன் பேட்டி!!

0
59
#image_title

இவங்களாலதான் நான் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தேன்… – வனிதா கிருஷ்ண சந்திரன் பேட்டி!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா கிருஷ்ண சந்திரன். சின்ன வயது முதலே இவருக்கு சினிமாவில் நாட்டம் அதிகம். அதனால், தனக்கு 13 வயது இருக்கும்போதே சினிமாவில் நடித்தவர். இதன் பிறகு தமிழ் சினிமாவில் ‘பாதை மாறினால்’ படத்தின் மூலம் முதன் முதலாக நடிகையாக நடித்தார்.

கிட்டத்தட்ட 180 படங்களுக்கு மேலே நடித்துள்ளார். மேலும், சினிமாவில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் இவர் நடித்துள்ளார். இவரும், Y.G.மகேந்திரனும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ‘அடுக்கு மல்லி’ படத்தில் மகேந்திரனுக்கு தங்கையாக தன் கமெடியில் அசத்தினார் வனிதா கிருஷ்ண சந்திரன்.

ஒரு சேனலுக்கு வனிதா கிருஷ்ண சந்திரன் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் பேசுகையில்,

‘சிம்லா ஸ்பெஷல்’ படத்தில் நானும், Y.G.மகேந்திரனும் ஜோடியாக நடித்தோம். அப்போது, படப்பிடிப்பில் மகேந்திரன் என்னிடம் ஒரு விஷயம் பேசினார். நீ அழுகிற படங்களை விட காமெடி படங்களில் நடிக்கலாம். உனக்கு காமெடி கதாபாத்திரம் நன்றாக வருகிறது. அதனால் நீ அதில் நடிக்க ஆரம்பி… என்று என்னிடம் கூறினார்.

அதேபோல் ஒருமுறை சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நான் மேடையில் காமெடியில் நடித்தேன். இதைப் பார்த்த கமல்ஹாசன் என்னிடம் வந்து, உனக்கு காமெடி நன்றாக வருகிறது. அதனால் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ட்ரை பண்ணு என்று சொல்லிவிட்டு சென்றார். இந்த மாதிரி பலர் கூறியதால்தான் நான் அதிகமாக காமெடி படங்களில் நடித்தேன் என்றார்.

author avatar
Gayathri