வைரமுத்துவை ஜொலிக்க வைத்தது இளையராஜா தான்!! பிரபல இயக்குநர் பதிவு!! 

0
322
It was Ilayaraja who made Vairamuthu shine!! Famous director record!!
It was Ilayaraja who made Vairamuthu shine!! Famous director record!!
வைரமுத்துவை ஜொலிக்க வைத்தது இளையராஜா தான்!! பிரபல இயக்குநர் பதிவு!!
கவிஞர் வைரமுத்து அவர்களை சினிமாவில் மேலும் மேலும் ஜொலிக்க வைத்தது இசைஞானி இளையராஜா அவர்கள் தான் என்று பிரபல இயக்குநர். சீனு ராமசாமி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி படிக்காத பக்கங்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டு பேசிய போது இசை பெரிதா அல்லது பாடல் வரிகள் பெரிதா என்கிற பிரச்சனை தமிழ் சினிமாவில் இருக்கின்றது. இசையில்லாமல் பாடலை பாடமுடியாதா என்ன. கண்ணதாசன் அவர்கள் எழுதிய பல பாடல்களை இசை இல்லாமலேயே பாட முடியும் அல்லவா. சில நேரங்களில் இசையை விட மொழி பெரியதாகவும் சில நேரங்களில் மொழியை விட இசை பேசியதாகவும் இருக்கும். இதை புரிந்தவன் ஞானி ஆகிறான். புரியாதவன் அஞ்ஞானி ஆகிறான்” என்று பேசினார்.
கவிஞர் வைரமுத்து அவர்களின் இந்த பேச்சு இசைஞானி இளையராஜா அவர்களை தாக்கி பேசுவது போல இருந்ததை அடுத்து இசைஞானி இளையராஜா அவர்களின் தம்பி கங்கை அமரன் அவர்கள் இனி மேல் இளையராஜா அவர்களை பற்றி தப்பாக பேசினால் நடப்பதே வேறு என்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். கங்கை அமரன் அவர்களின் இந்த வீடியோவிற்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் எந்தவொரு பதிலையும் சொல்லவில்லை. இந்நிலையில் தற்பொழுது இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் பதிவிட்டுள்ள அந்த பதிவில் “உண்மையில் வைரமுத்து அவர்களை வளர்த்தது இசைஞானி இளையராஜா அவர்கள் தான். வைரமுத்து அவர்களின் மீதான கோபத்தில் யாரையும் கவித்துமாக எழுதவிடாமல் 20 வருடங்களாக தான் போட்ட நிறைய டம்மி லிரிக்ஸ்ஸை ஓகே பண்ணி அய்யா வைரமுத்து அவர்களை ஜொலிக்க வைத்தவர் இளையராஜா” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் கங்கை அமரன் அவர்களையும் டேக் செய்துள்ளார். இயக்குநர் சீனு ராமசாமி அவர்களின் இந்த பதிவுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் வாலி போன்றவர்களின் பாடல் வரிகள் டம்மியா என்று பலரும் அந்த பதிவுக்கு கீழ் கேள்வி கேட்டு வருகின்றனர்.
Previous articleஇடி, மின்னலுடன் கனமழை! அனல் காற்று – சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!
Next articleநிறைய கேள்விகளுக்கு விடை தேட வேண்டியுள்ளது!!தோல்வி குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி!!