PMK: பாமக உட்கட்சி பூசலானது கட்சி பிரிவினையை ஏற்படுத்தி விடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அன்புமணியின் முந்தைய இளைஞர் அணி பதவியானது யாருக்கு வழங்கப்படுவது என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வந்தது. அந்த வகையில் ராமதாஸ் மகள் வழி பேரனான முகுந்தனுக்கு வழங்கப்படும் என்று பேச்சு அடிபட்ட பொழுதே இதனை அன்புமணி ராமதாஸ் தவிர்த்து வந்துள்ளார்.
புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் நடந்த பொழுது இது குறித்து அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டார். வெளியிட்ட அக்கணமே அப்பா மகன் இருவருக்குமிடையே வார்த்தை போர் முற்றியது. ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை ஆட்களை நியமிப்பீர்கள் என்ற கேள்வியை அன்புமணி முன் வைத்தார். இது நான் உருவாக்கிய கட்சி நான் சொல்வது தான் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறினார். இல்லையென்றால் கட்சியில் இடமில்லை என தெரிவித்தார்.
உடனடியாக அன்புமணி எனக்கென்று பனையூரில் தனி அலுவலகம் உள்ளது என்று கூறிவிட்டு செல்போன் எண்ணையும் கொடுத்து அங்கு வந்து என்னை பாருங்கள் என கூறி அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். அடுத்த நாளே தைலாபுரம் தோட்டத்தில் இருவருக்கும் சமரசம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில் முகுந்தன் இளைஞர் அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டு விட்டதாக ராமதாஸ் கூறினார். ஆனால் இதில் அன்புமணிக்கு துளி கூட விருப்பமில்லை.
இதனிடையே கலைஞர் ஆட்சியில் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க சொன்னது நான்தான் என்று ராமதாஸ் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அவ்வாறு அவர் அளித்த போது இதர குடும்பத்தை சேர்ந்த தலைவரின் மகன் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணியவர், தன் மகனை மட்டும் தலை தூக்க விடாமல் அடக்குமுறையை பயன்படுத்துவதா என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். மேற்கொண்டு இது குறித்து ரவீந்திரன் துரைசாமியும் பேட்டி ஒன்று அளித்தார்.
அதில் ராமதாஸ் அவர்கள், அன்புமணி குறித்து தப்பான பார்வையை எண்ணி உள்ளார். அதாவது அன்புமணியால் தொண்டர்களை இணைக்க முடியாது, மேற்கொண்டு முகுந்தன் கட்சிய ரீதியாக அனைத்தையும் எடுத்து செயல்படுத்துவார் என்றெல்லாம் நம்புகிறார். ஏன் காடுவெட்டி குரு இடத்தையே அவருக்கு கொடுத்து விடலாம் என்று முடிவு எடுத்துள்ளார். இவ்வாறு தனது அப்பா தன்னை முன்னிறுத்தாமல் மகள் வழி பேரனை முன்னிறுத்துவது பிடிக்கவில்லை.
மனைவி ஏற்றுக்கொள்ள விரும்பிய அன்புமணி அக்கா வழி மகனை மட்டும் ஏற்க மறுத்து வருகிறார். அதனால்தான் மாவட்ட செயலாளர்களை அழைத்து தொடர்ந்து ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவை போல் பாமகக்குள் கட்சி பிரிவினை ஏற்பட்டால் கட்டாயம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். ஆனால் பாமக பல அதிகார பதவியை அனுபவித்ததால் பிரிவினை ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்கள் என்று ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.