இனி வரும் நாட்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் இது கட்டாயம்! வெளிவந்த அதிரடி உத்தரவு!!
கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்ததை அடுத்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மக்களை பெரும் அளவு பாதிப்படைய செய்தது.
மக்களும் இதை எதிர்த்து மீண்டு வரும் சூழலில் அடுத்தடுத்த புதிய பரிமாற்றத்தில் இந்த கொரோனாவானது மாற்றமடைந்து மேலும் பெருமளவு பாதிப்பை தான் ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது ஓராண்டு காலம் கொரோனா தொற்று பரவல் இல்லாத சூழலில் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை நடத்தி வந்ததை அடுத்து மீண்டும் சீனாவில் பிஎப் 7 என்ற கொரோனா வகை பரவ ஆரம்பித்தது. முன்பை காட்டிலும் இந்த வைரஸ் பாதிப்பால் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழக்க நேரிட்டது.
இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லாததை அடுத்து தற்பொழுது அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை முன்கூட்டியே அறிந்த மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் மருந்து மாத்திரைகள் கட்டாயம் கையிருப்பில் வைத்திருக்கும் மாறும் மக்களுக்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டது.
அந்த வகையில் தற்பொழுது அனைத்து மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வருக்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், இனி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு கட்டாயம் காய்ச்சல் தொடர்பான பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உள்நோயாளிகளை தவிர்த்து புற நோயாளிகளுக்கு என்று தனிப்பட்ட முறையில் இந்த காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் செய்யப்பட்டு மேற்கொண்டு சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோல நோயாளிகளின் தனித்தன்மை கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு சிகிச்சை அளித்து குணமாக உதவி புரியும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் சுவாச நோய் மருத்துவர்களின் கீழ் முதுநிலை படிக்கும் மருத்துவ மாணவர்கள் அல்லது உதவி பேராசிரியர்கள் மூலம் அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சை முறையை அவ்வபோது கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.கொரோனா தொற்று பாதிப்படைந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் பட்சத்தில் அதற்கான முடிவை சுவாச நோய் மருத்துவர்கள் தான் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல அனைத்து மருத்துவமனைகளும் கட்டாயம் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் மருந்து மாத்திரைகள் கையிருப்பில் இருப்பதை கட்டாயம் கண்காணித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.