குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் ஜீவனாம்சம் கிடையாதா? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

0
163
No child support if not allowed to see the child? Action order of the High Court!!
No child support if not allowed to see the child? Action order of the High Court!!

குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் ஜீவனாம்சம் கிடையாதா? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

பூந்தமல்லி சேர்ந்த தம்பதி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் விவாகரத்து பெற்றுத் தருமாறு அவரது கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.

இதற்கு எதிராக இவரது மனைவி தான் தற்பொழுது 11 மாத குழந்தையுடன் திருச்சியில் இருப்பதாகவும் தன்னால் குழந்தையை வைத்துக் கொண்டு அவ்வபோது பூந்தமல்லிக்கு வந்து செல்ல முடியவில்லை என்பதால் இந்த வழக்கை திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி தரும் படி மனு தாக்கல் செய்திருந்தார்.

அது மட்டுமின்றி தன் கணவர் தங்கள் குழந்தைக்கான ஜீவனாம்சம் தராமல் தவிர்த்து வருவதாகவும் மேற்கொண்டு புகார் அளித்துள்ளார். இவ்வாறு இவர் புகார் அளித்ததற்கு அவரது கணவர் தரப்பிலிருந்து குழந்தையை பார்க்கவே அனுமதிக்க முடியாது என்பது பொழுது நான் ஏன் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

கணவன் மனைவி இவர்களின் இருதரப்பு வாதத்தையும் நீதிபதி கேட்டுக்கொண்டு இதற்கான தீர்ப்பையும் வழங்கினார்.

அதில், குழந்தை பார்க்க அனுமதிப்பதில்லை என்பதற்காக குழந்தையின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான செலவுகளை அவர்களது கணவன்மார்கள் தவிர்ப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி விவாகரத்து பெற்று கணவரை பிரிந்து வாழும் பெண்களுக்கு அவர்களின் பெற்றோர்களுக்கு தான் இது பெரும் அழுத்தத்தை கொடுக்கும்.

எனவே கட்டாயம் குழந்தைக்கான ஜீவனாம்சம் கொடுத்தாக வேண்டும். அதுமட்டுமின்றி குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்பதனால் ஜீவனாம்சம் வழங்குவதை ரத்து செய்ய முடியாது எனக் கூறி இவ்வழக்கை திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி அமைத்து உத்தரவிட்டார்.