இரண்டு நிமிடத்தில் உடல் சூடு சர்ருன்னு இறங்க.. இதை அரைத்து பூசி குளிக்கலாம்!!

0
101

இந்த வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க குளியல் அவசியமான விஷயமாக இருக்கிறது.கற்றாழை,வெந்தயம்,நெல்லிக்காய் போன்ற பொருட்களை அரைத்து குளித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

வெயிலில் உடல் சூடு அதிகரித்தால் மயக்கம்,ஒருவித மந்த உணர்வு போன்றவை ஏற்படும்.எனவே இதில் இருந்து மீள நீங்கள் இந்த குளியலை மேற்கொள்ளலாம்.

தீர்வு 01:

கற்றாழை குளியல்

ஒரு பிரஸ் கற்றாழையை எடுத்து தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கற்றாழை ஜெல்லை பேஸ்ட் போல் அரைத்து உச்சி முதல் பாதம் வரை பூசி குளிக்க வேண்டும்.இப்படி செய்தால் உடல் சூடு தணியும்.கற்றாழை ஜெல்லை தலைக்கு அப்ளை செய்து வந்தால் பிசு பிசுப்பு நீங்கும்.

தீர்வு 02:

வெந்தயக் குளியல்

இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஊறவைத்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தலை முதல் பாதம் வரை பூசி தேய்த்து குளித்தால் உடல் சூடு தணியும்.

தீர்வு 03:

நெல்லிக்காய் குளியல்

10 பெரிய நெல்லிக்காயை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து உச்சி முதல் பாதம் வரை பூசி தேய்த்து குளித்தால் உடல் புத்துணர்வுடன் இருக்கும்.

தீர்வு 04:

மூலிகை குளியல்

துளசி,புதினா,வேப்பிலை போன்றவற்றை தண்ணீரில் ஊறவைத்து குளித்தால் உடல் சூடு தணியும்.அதேபோல் சந்தனத்தை அரைத்து பூசி குளித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.அதேபோல் வெட்டி வேர் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

Previous articleஇதை சாப்பிட்டால் மாத்திரை இல்லாமல் சுகர் லெவலை நொடியில் கட்டுப்படுத்தலாம்!!
Next articleவெயில் காலத்தில் குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? கோடை நோய்கள் அண்டாமல் இருக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!