அதிர்ச்சியில் மருத்துவர்கள்..! மனிதர்களிடம் இருந்து பூனைக்குமா..?

0
217

மனிதர்களை தொடர்ந்து இத்தாலியில் பூனைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா தொற்று உலகம் 215க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2020 ம் ஆண்டு வரை நாள்தோறும் லட்சகணக்கானோரை பாதிப்பிற்கு உள்ளாக்கும் கொரோனா வைரஸ் தொற்றிற்கு 2021ம் ஆண்டின் தொடக்கத்திலேயே தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. தடுப்பு மருந்து செயல்பாட்டிற்கு வந்ததும் மக்களிடையே ஓரளவுக்கு நம்பிக்கை எழுந்த நிலையில், பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்றின் வேகம் தலைத்தூக்க தொடங்கியது.

சில பகுதிகளில் இரவு நேர கட்டுப்பாடுகளும், பகுதி நேர கட்டுப்பாடுகளும் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், இத்தாலியில் உள்ள நொவாரா பகுதியில் பூனை ஒன்றிற்கு பிரிட்டனில் பரவிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா தொற்று மனிதர்களை தாண்டி பூனைக்கு பரவியது இதுவே முதல்முறை. காரணம் பூனையை பராமரித்து வந்த அதன் உரிமையாளருக்கு 10 நாட்களுக்கு முன்பு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து பூனைக்கும் வைரஸ் பரவி இருப்பது மருத்துவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அதிர்ச்சியில் மருத்துவர்கள்..! மனிதர்களிடம் இருந்து பூனைக்குமா..?

தற்பொழுது பூனைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறும் மருத்துவர்கள் பூனையும், அதன் உரிமையாளரும் படிப்படியாக குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே பூனைக்கு கொரோனா பரவியதால் இத்தாலி மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் பூனைகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவாது என்றும், மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவ வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Previous articleஇஸ்லாமியர்களுக்கு பாஜக வேட்பாளர் விடுத்த நேரடி சவால்… ஜமாத் கட்டுப்பாட்டால் ஆவேசம்…!
Next articleதுணை முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here