கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் – இத்தாலி அறிவிப்பு

Photo of author

By Parthipan K

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் – இத்தாலி அறிவிப்பு

கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹானில் துவங்கிய கொரோனா நோய் தொற்று உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் மிகவும் அதிகமுள்ள நிலையில், இந்தியாவில் கடந்த வாரம் முதல் தொற்று பரவும் வேகம் அறிவித்துள்ளது.

கொரோனாவிற்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே நிலமை சீரடையும் என்ற நிலையில் உலகம் முழுவதுமுள்ள முன்னணி மருந்து நிறுவனங்கள் அரசு உதவியுடன் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முந்தைய தினம் இஸ்ரேல் கொரொனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கான காப்புரிமையை பெற முயற்சித்து வருதாகவும் கூறியிருந்த நிலையில் உலகின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கியிருப்பதாக இத்தாலி கூறியுள்ளது.

டாகிஸ் எனும் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி, ரோம் நகரில் உள்ள ஸ்பல்லான்ஷானி மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.முதலில் இந்த தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊசி போட்டதும் அந்த எலியில் கொரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் உருவாகி உள்ளன.

இந்த தடுப்பூசியை பரிசோதித்தபோது, மனித உடலிலும் வைரசின் செயல்பாட்டை தடுத்துள்ளது. இது மனித அணுக்களில் உள்ள வைரசை அழித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசியால் கொரோனா வைரஸ் அழிந்திருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று டாகிஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி லூய்கி, இத்தாலி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.இத்தாலியில் இதுவரை தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆய்வுகளில் இது மிகவும் முன்னேறிய கட்டம் என்று அவர் கூறியுள்ளார்.

கோடை காலத்தில் மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தும் முழுமையான ஆராய்ச்சி தொடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.இந்நிலையில், தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு, சர்வதேச அளவில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.