உங்களுக்கு சரும அரிப்பு,எரிச்சல் பிரச்சனை இருந்தால் அதை இயற்கை வைத்தியம் மூலம் சரி செய்து கொள்ளுங்கள்.அலர்ஜி,உணவுப்பழக்க வழக்கம்,கெமிக்கல் பொருட்களால் தோல் அலர்ஜி ஏற்படுகிறது.இதில் இருந்து மீள இங்கு தரப்பட்டுள்ள டிப்ஸ் நிச்சயம் உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)வேப்பிலை – ஒரு கொத்து
2)வெற்றிலை – ஒன்று
3)பட்டை துண்டு – ஒன்று
4)பன்னீர் ரோஜா இதழ் – இரண்டு தேக்கரண்டி
5)கடுக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் ஒரு கொத்து வேப்பிலை மற்றும் ஒரு வெற்றிலையை தண்ணீரில் சுத்தம் செய்து உரலில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
அடுத்து ஒரு பன்னீர் ரோஜா இதழ் மற்றும் ஒரு துண்டு பட்டையை உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
பிறகு ஒரு கிண்ணத்தை எடுத்து வேப்பிலை வெற்றிலை பேஸ்டை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு ரோஜா இதழ் பேஸ்டை அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 04:
பிறகு ஒரு தேக்கரண்டி கடுக்காய் பொடியை போட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை தோல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் பூசி காயவைத்து குளித்து வந்தால் அரிப்பு எரிச்சல் முற்றிலும் குணமாகிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)வேப்பிலை – இரண்டு கொத்து
2)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
3)குப்பைமேனி இலை – கால் கப்
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் இரண்டு கொத்து வேப்பிலை மற்றும் கால் கப் குப்பைமேனி இலையை தண்ணீரில் போட்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
அடுத்து அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை தோலில் பூசி சிறிது நேரம் காயவிட்டு குளிக்க வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் தோல் அரிப்பு பிரச்சனை சரியாகும்.
அதேபோல் குளிக்கும் நீரில் வேப்பிலை விழுது மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டால் தோல் அரிப்பு,சிவந்து போதல் போன்ற சரும வியாதிகள் முழுமையாக குணமாகும்.