வாகன சோதனையில் பிடிபட்ட பொருள்! இத்தனை கிலோவா? அதிர்ச்சியில் போலீசார்!
தெலுங்கானாவில் பத்ராத்ரி கொத்தகுடெம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு சுனில் தத் தலைமையிலான போலீசார் சந்தேகத்துக்குரிய வகையிலான வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். அந்த வழியே வந்த அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதிலை தந்ததன் காரணமாக அந்த வாகனத்தை தீவிர சோதனையில் ஈடுபடுத்தினர்.
அதை தொடர்ந்து அந்த வண்டியில் மரிஜூவானா என்ற 3650 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு மட்டும் தற்போது ரூ.7 கோடியே 30 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அதை தொடர்ந்து வந்த இரண்டு லாரிகளையும் போலீசார் சோதனையிட்டு போதைப் பொருட்களை பறிமுதல் செய்து வாகனங்களையும் கைப்பற்றி வைத்துள்ளனர்.
அந்த வாகனங்களில் இருந்த 4 பேரை கைது செய்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. எனினும் மக்களின் தேவைக்காக சரக்கு வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்தி ஆயுதம், தங்கம் போன்ற பிற கடத்தல் சம்பவங்களை போல் நாடு முழுவதும் தற்போது போதை பொருள் கடத்தல்களும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பின்போது போலீசார் தெரிவித்தனர்.