கன்னியாகுமரிக்கு கடத்தி சென்ற போது பிடிபட்ட பொருள்! வனத்துறையினர் செய்த செயல்!

0
151
Item caught while being smuggled to Kanyakumari! The action taken by the forest department!
Item caught while being smuggled to Kanyakumari! The action taken by the forest department!

கன்னியாகுமரிக்கு கடத்தி சென்ற போது பிடிபட்ட பொருள்! வனத்துறையினர் செய்த செயல்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கீரனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நம்பர் 3 கொமாரபாளையம் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வெண்ணந்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது காரில் இருந்த 3 பேர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த காகித பைகளில் 2 மண்ணுளி பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கார் டிரைவர் வேல்முருகன் (வயது 49), ஆல்பின் (48), வில்பிரின் (36) ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து ராசிபுரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் கார் மற்றும் மண்ணுளி பாம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து பிடிபட்ட 3 பேரிடம் ராசிபுரம் வனத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், ராசிபுரம் வனச்சரகர் ரவிச்சந்திரன் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் 3 பேரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வேலூரில் இருந்து தலா 4½ கிலோ எடை கொண்ட 2 மண்ணுளி பாம்புகளை அதிக விலைக்கு விற்க கன்னியாகுமரிக்கு கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். யாருக்கு விற்பனை செய்ய மண்ணுளி பாம்புகளை கடத்தி சென்றனர் என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleகொட்டி தீர்க்க போகும் மழை! இந்த மாநிலங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட்!
Next articleதலைநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து கடைகள் முற்றிலும் நாசம்!