காரில் கடத்தி வரப்பட்ட பொருள்! மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கைது!

Photo of author

By Hasini

காரில் கடத்தி வரப்பட்ட பொருள்! மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கைது!

தற்போதுள்ள வளரும் தலைமுறைகள் ஆன இளம் பிள்ளைகள் மிகுந்த சுயநலத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அதாவது மற்றவர்கள் எப்படி போனாலும் நமக்கு என்ன? நாம் நன்றாக இருந்தால் போதும், என்று நினைக்கும் அளவிற்கு மனசாட்சி இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

மேலும் பணம் பார்க்க வேண்டும் என்று நினைத்து விட்டால் எப்படியும் சம்பாதிக்கலாம் என்றும் நினைக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்வு மங்களூர் அருகே தற்போது நடந்துள்ளது. இந்த தகவல்கள் செய்தியாளர்களிடம் போலீஸ் கமிஷனர் சசிகுமார் அவர்கள் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில், தட்சிண கன்னடா மாவட்டத்தில், மங்களூர் அருகே உள்ள போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது மங்களூருவில் இருந்து கோவை நோக்கி சென்ற ஒரு காரை தடுத்து சோதனையிட்டபோது, அந்த கார் தமிழக பதிவு எண் கொண்டு இருந்தது.

அதைத்தொடர்ந்து காருக்குள் சோதனை செய்யும் பொழுது கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அறிந்தனர். இதையடுத்து காரில் இருந்த இளம் பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் போது அந்த மாணவி மீனு ரஷ்மி என்பதும், அந்த நபர் அஜ்மல் என்பதும் தெரியவந்தது. கேரள மாநிலம் காசர்கோடு வை சேர்ந்தவர் அஜ்மல் என்பதும், தமிழ்நாடு நாகர்கோவில் அருகே ராணி தோட்டம் பகுதியைச் சேர்ந்த மினு ரஷ்மி என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் 27 வயதுடையவர்கள்.

மீனுரஷ்மி மங்களூர் அருகே சுரத்கல் பகுதியில் தங்கியிருந்து முக்கா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் ஐந்தாம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து  இவர்கள் ஐரோப்பிய நாடுகளில், இருந்து கேரள மாநிலம் காஞ்சன் காடு பகுதிக்கு கஞ்சாவை வரவழைத்து, அதனை ரயிலின் மூலம் மங்களூருக்கு கொண்டு வந்ததும் தெரிந்தது.

அவர்கள் இருவரும் அங்கிருந்து கார் மூலம் கஞ்சாவை மங்களூர் கோனஜே  பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு கொடுக்க சென்று சென்றுள்ளனர். மேலும் கேரளா மற்றும்  மங்களூர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் கஞ்சாவை விற்பதும் தெரியவந்தது. அதனை அடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 30 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ 260 கிராம் கஞ்சா மற்றும்  ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்