இனி இந்த நாட்டிற்கும் செல்ல தடை தான்! அதிர்ச்சியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்!

Photo of author

By Rupa

இனி இந்த நாட்டிற்கும் செல்ல தடை தான்! அதிர்ச்சியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்!

கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு வரை மக்களை பாதித்து வருகிறது.தற்போது இந்த கொரோனா 2-ம் அலையாக உருமாறி கொத்து கொத்தாக மாக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றின் பலி எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.

அந்தவகையில் பல வெளிநாட்டு அரசாங்கம்,இந்தியர்கள் அவர்கள் நாட்டிற்கு செல்ல தடை விதித்துள்ளது.கொரோனா தொற்று உள்ளவர்கள்  அங்கு சென்றால் அவர்கள் நாட்டுக்கும் கொரோனா தொற்றானது அதிக அளவு பரவ ஆரம்பித்து விடும் என்பதற்காக தடை விதித்துள்ளது.நியூசிலாந்து,ஹாங்காங்,இங்கிலாந்து மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியர்கள் அவர்கள் நாட்டிற்கு வருவதை தடை விதித்துள்ளது.

அந்தவகையில் சிங்கப்பூரும் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.இந்தியாவிலிருந்து வரும் நபர்கள் 21 நாட்கள் தனிமை படுத்திய பிறகே வெளியே செல்ல அனுமதி என்ற புதிய செயல்பாட்டை நிறுவியது.அதனை தொடர்ந்து கனடா அரசாங்கமும் புதிய தடை ஒன்றை அமல்படுத்தியுள்ளது.அதிக அளவு கொரோனா தொற்றானது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் காணப்படுவதால் அந்த இரு நாட்டினரும் கனடா வருவதற்கு தடை விதித்துள்ளது.இந்த தடையானது 30 நாட்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்,இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வரும் நபர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால்,இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறுகின்றனர்.