வெயிலுக்கு இதமாக மழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Rupa

வெயிலுக்கு இதமாக மழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் சூரியன் சுட்டெரித்தது.அந்தவகையில் வெயிலுக்கு இதமாக தற்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.குறிப்பாக சென்னையில் வெயில் இரு நாட்களாக கொளுத்துய நிலையில் தற்போது அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.கன்னியாகுமரி கடல் அருகே நிலைக்கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று மாலை முதல் தமிழகத்தில் காஞ்சுபுரம்,செங்கல்பட்டு,சேலம்,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் இன்று விடியற்காலை முதலே இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.சென்னையில் புறநகர் பகுதிகளில் சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.அந்தவகையில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய மழையால் மக்கள் மகிழ்ந்தனர்.இன்று அதிகாலை முதல் திருவல்லிக்கேணி,ராயப்பேட்டை,தி நகர்,கிண்டி,திருவான்மியூர்,சைதாப்பேட்டை,கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும் பல்லாவரம்,தாம்பரம்,சேலையூர்,ஊரப்பக்கம்,கூடுவாஞ்சேரி ஆகிய புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. வெயில் சுட்டெரித்த நிலையில் மழை பெய்தது மக்களுக்கு இதமான சூழலை கொடுக்கிறது.