நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியமான ஒன்றாகும்.இதனால் தாங்கள் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் உணவுகளை அவசியம் செய்து உண்ண வேண்டும்.அந்தவகையில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பனங்கிழங்கு பவுடரை எடுத்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:-
1)பனங்கிழங்கு – பத்து
2)பால் – ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
முதலில் பத்து பனங்கிழங்கு வங்கிக் கொள்ளுங்கள்.பிறகு இதை நீரில் போட்டு செய்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
பிறகு பாத்திரத்தில் அரை பாகம் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள பனங்கிழங்கை அதில் போட்டு அரை மணி நேரத்திற்கு வேகவிடுங்கள்.
அதன் பிறகு பனங்கிழங்கை ஒரு காட்டன் துணியில் பரப்பி வெயிலில் போட்டு நன்றாக காயவிட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்க வையுங்கள்.
பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி பனங்கிழங்கு பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கலந்து பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
பனங்கிழங்கு பொடியை வைத்து கஞ்சி செய்து பருகி வந்தாலும் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
இதற்கு முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்து மூன்று தேக்கரண்டி அளவிற்கு பனங்கிழங்கு பொடி போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் இந்த பாத்திரத்தை வைத்து குறைவான தீயில் கஞ்சி காய்ச்சி பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.