உங்கள் கண் பார்வை திறம் அதிகரிக்க வேப்பம் பூவை பொடித்து சாதம் செய்து சாப்பிடலாம்.வேப்பம் பூவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கண் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது.
கண் பார்வை திறனை அதிகரிக்கும் வேப்பம் பூ சாதம்:
தேவையான பொருட்கள்:-
1)வேப்பிலை பொடி – கால் டீஸ்பூன்
2)வேப்பம் பூ பொடி – இரண்டு டீஸ்பூன்
3)எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
4)சின்ன வெங்காயம் – 10(நறுக்கியது)
5)மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
6)கறிவேப்பிலை – ஒரு கொத்து
7)கடுகு – அரை டீஸ்பூன்
8)உப்பு – தேவையான அளவு
9)சீரகம் – கால் டீஸ்பூன்
10)மிளகுத் தூள் – கால் டீஸ்பூன்
11)வர மிளகாய் – இரண்டு
12)உளுந்து பருப்பு – அரை டீஸ்பூன்
13)சூடான சாதம் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் கடுகு,சீரகம்,உளுந்து பருப்பு போட்டு பொரியவிட வேண்டும்.
அதன் பிறகு கறிவேப்பிலை,நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.அதன் பிறகு வர மிளகாயை போட்டு வதக்கி எடுக்க வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள்,கருப்பு மிளகுத் தூள் சேர்த்து கிளற வேண்டும்.அடுத்து இரண்டு வர மிளகாயை கிள்ளி அதில் போட்டு வதக்க வேண்டும்.
அடுத்து கால் தேக்கரண்டி வேப்பிலை பொடியை அதில் கலந்துவிட வேண்டும்.அதன் பிறகு அரைத்த வேப்பம் பூ பொடி இரண்டு தேக்கரண்டி அளவு போட்டு கிளற வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
இறுதியாக சூடான சாதத்தை போட்டு நன்றாக கிளற வேண்டும்.இந்த வேப்பம் பூ சாதத்தை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.வேப்பம் பூ சாதம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.வேப்பம் பூ சாதம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.