ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா, கருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தியானேஸ்வரன் (29).இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பினை முடித்து விட்டு பெங்களுரில் பிரபலமான ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்.தற்பொழுது கொரோனா ஊரடங்கால் வொர்க் பிரம் ஹோம் (work from home)செய்து வருகிறார்.வேலை பார்த்த பின்பு பொழுது போவதற்காக தனது அப்பாவுடன் விவசாயத்தில் இறங்கினார் தியானேஸ்வரன். இவர் பாரம்பர்யமான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவர் கூறுகையில், கடந்த ஆறு மாதமாக வீட்டில் இருப்பதாகவும் பொழுது போவதற்காக தனது அப்பாவுடன் காட்டுக்குச் சென்று பணி செய்து வருவது ஒரு மன நிறைவைத் தருவதாக அவர் கூறினார்.இவருக்கு சொந்தமாக 6 ஏக்கர் நிலம் உள்ளது.தற்பொழுது பருவமழை தொடங்கி நன்றான விவசாயம் செய்ய சூழல் ஏற்பட்டுள்ளதால் பயிர் சாகுபடி செய்ய தொடங்கியதாக கூறினார்.
இவர் தனது நண்பர்களிடம் கருத்து கேட்டு கரும்பு பயிர் எப்படி செய்வது என்று கருத்து தெரிவித்த பின் கரும்பு பயிரை நடத்த தொடங்கினார்.பின்பு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க ஆயத்தமானார்.அதனைத் தொடர்ந்து காலையும் மாலையும் அவரது பணி முடிந்த பின்பு விவசாயத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார் தியானேஸ்வரன்.
விவசாயம் செய்பவர்களுக்கு தான் அந்த சுமை தெரியும் என்று அவர் கருத்து கூறினார்.அதற்கு காரணம் அதிக வேலைச்சுமை இருப்பதாகவும், சரியான விலை நிர்ணயம் கிடைக்காததால் விவசாயிகள் மரணமவதாக தியானேஸ்வரன் கூறினார்.இது இளைஞர்களுக்கு இடையே பெரும் இறப்பை தருவதாக கூறினார்.5 ஏக்கருக்கும் குறைவான நிலங்கள் உள்ள விவசாயிகள் இதில் லாபம் காண்பது மிக கடினமாக இருக்கும் என்று தியானேஸ்வரன் கூறினார்.
கொரோனா முடியும் வரை
கரும்பு பணியை செய்வதாகவும் ,பின்பு வேலையை தனது அப்பாவிடம் கொடுத்து விட்டு பணிக்குச் செல்ல இருப்பதாகவும் தியானேஸ்வரன் கூறினார்.