அரசியலில் ரவுடிகள் போட்டியிடுவதை தடுக்க வேண்டும்:! மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை!

0
191

சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதனை எதிர்த்து அவரது மனைவி ஜமுனா, சென்னை உயர் நீதிமன்றத்தில்
ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு இன்று விசாரித்து. அவர்கள் அரசியல் பின்புலத்துடன் ரவுடிகள் பலர் புதுச்சேரியில் உலா வருவதாக தெரிவித்தனர்.

மேலும் ரவுடிகள் அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள், கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது நாட்டிற்கே துரதிருஷ்டவசமானது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ரவுடிகளுக்கு கட்சியில் நிற்க இடமளிப்பது, தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது போன்ற செயல்களை கட்சி தலைவர்கள் தவிர்த்தால் மட்டுமே, அரசியலை தூய்மைப்படுத்த முடியும் எனவும் நீதிபதிகள் கூறினர்.
மேலும் ரவுடிகள் அரசியலுக்குள் நுழைந்து, எம்.பி., எம்எல்ஏக்கள் ஆகுவதும் மேலும் அமைச்சர் போன்ற உயர்பதவி ஏற்பதும், மக்களுக்குத் தவறான தகவலை கொண்டு சேர்க்கும் எனத் நீதிபதிகள் தெரிவித்தனர். ரவுடிகள் அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டனர்.மேலும் இதனை தடுக்க மத்திய அரசு தகுந்த சட்டம் கொண்டுவர வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினார்.

மேலும் புதுச்சேரியில் எத்தனை ரவுடிக் கும்பல்கள் உள்ளன?எத்தனை ரவுடி கும்பல்களுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கின்றது?இதுபோன்ற பல கேள்விகளுக்கு புதுச்சேரி அரசு பதிலளிக்க வேண்டுமென்று கூறி வழக்கினை
ஒத்திவைத்துள்ளனர்.

Previous articleஇந்தியாவில் மீண்டும் டிக் டாக்! பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ்
Next articleகரும்பு விவசாயத்தில் சிறந்து விளங்கும் ஐ.டி இளைஞர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here