எம்எல்ஏ முருகேசனின் கையை தட்டிவிட்ட ஐயூஎம்எல் மாவட்ட செயலாளர்!! திமுக தொண்டர்கள் அதிர்ச்சி!!

Photo of author

By Divya

எம்எல்ஏ முருகேசனின் கையை தட்டிவிட்ட ஐயூஎம்எல் மாவட்ட செயலாளர்!! திமுக தொண்டர்கள் அதிர்ச்சி!!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம்(ஜூன் 04) ஆம் தேதி வெளியானது.ராமநாதபுரம் தொகுதியியில் இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி 5,09,664 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

நவாஸ்கனியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக சுயேட்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 3,42,882 வாக்குகள் பெற்றார்.இந்நிலையில் நவாஸ்கனி அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை விட 1,66,782 வாக்குகள் அதிகம் பெற்று மீண்டும் எம்பியாகிறார்.

ராமநாதபுர தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி பெற்ற வாக்குகள்: 5,09,664

பாஜக சுயேட்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பெற்ற வாக்குகள்: 3,42,882

அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் பெற்ற வாக்குகள்: 99,780

நாதக வேட்பாளர் சந்திர பிரபா பெற்ற வாக்குகள்: 97,672

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட நவாஸ்கனி 1.2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று எம்பி ஆனார்.இந்நிலையில் மீண்டும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அவர்கள் நவாஸ்கனிக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்,திமுக பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் இரு கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்.

இந்நிலையில் நவாஸ்கனி வெற்றி சான்றிதழ் பெறும் பொழுது திமுக எம்எல்ஏ முருகேசன் சான்றிதழ் மீது கை வைத்தபடி போட்டோவிற்கு போஸ் கொடுத்தார்.இதனால் சான்றிதழ் மீது இருந்த எம்எல்ஏ முருகேசனின் கையை காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வேகமாக தட்டிவிட்டார்.இந்த சம்பவத்தால் திமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில் திமுக-இந்தியன் முஸ்லீம் லீக் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.