ஜெ அன்பழகன் உடல்நிலை – மருத்துவனை புதிய அறிவிப்பு

Photo of author

By Parthipan K

ஜெ அன்பழகன் உடல்நிலை – மருத்துவனை புதிய அறிவிப்பு

திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை குரோம்பேட்டையிலுள்ள ரெலா மருத்துவமனையில் உடல்நிலை பாதிப்பால் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா அறிகுறி இருந்த காரணத்தால், அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

ஏற்கனவே அவருக்கு சில உடல் உபாதைகள் இருந்த காரணத்தால் அவர் உடல்நிலை மோசமடைந்து வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு அதன் மூலம் சுவாசித்து வந்தார். இது தொடர்பாக ரெலா மருத்துவமனை அவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கடந்த 48 மணி நேரத்தில் உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை எனவும், 80% அவர் வெண்டிலேட்டர் துணையுடன் சுவாசித்து வருவதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அவர் உடல் ஆக்சிஜன் அளவு 20 சதவிகிதம் குறைக்கப்பட்டு 60 சதவிகித ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலையிலிருந்து அவரது உடல் நிலை மீண்டும் மோசமடைந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் அதிக அளவில் தேவைப்படுவதாகவும், ரத்த அழுத்தம் அதிகரித்து, ஏற்கனவே இருந்த நுரையீரல் நோய் மேலும் தீவிரமடைந்துள்ளதாக ரெலா மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.