அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர் ஜி.சம்மந்தம் கடந்த 27 9 1987 ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் இணைந்தார். சம்மந்தம் மதுரை, செங்கல்பட்டு, போன்ற பகுதிகளில் பணியாற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது.
1996 ஆம் ஆண்டில் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு புகார் எழுந்ததை தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு தலைமையிலான விசாரணைக் குழு இதனை விசாரணை செய்து வந்தது. இந்த நிலையில், 3- 12-1997 அன்று இந்த விசாரணைக் குழுவில் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டவர் ஜி.சம்பந்தம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் சாட்சிகள், விசாரணை சொத்துக்களின் மதிப்பீடு, அரசு சான்று ஆவணங்கள் போன்ற வேலைகளில் நல்லம்ம நாயுடு உடன் சேர்ந்து செயல்பட்டவர் சம்பந்தம் என்று சொல்லப்படுகிறது.
அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் மாறிய போதும் கூட இந்த வழக்கை நன்கு அறிந்தவர் என்ற காரணத்தால், ஆட்சி மாறினாலும் சம்மந்தம் இந்த வழக்கில் இருந்து மாற்றப்படாமல் இருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதி கட்டத்தில் சம்பந்தம் ஜெயலலிதா தரப்பு சாட்சியாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த சொத்துக் குவிப்பு வழக்கு கடந்த 2004ஆம் வருடத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட சமயத்தில் விசாரணையை மேற்கொள்ள பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டார் சம்பந்தம். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டு வழக்கிலும் தொடர்ச்சியாக இவர் ஆஜராகி இருக்கின்றார்.
சென்னை நீதிமன்றம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கர்நாடக உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் சென்றது சொத்து குவிப்பு வழக்கில் 19 வருடங்களாக பணியாற்றிய ஜி.சம்மந்தம் 2016 ஆம் ஆண்டில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு அவர் செங்கல்பட்டு அண்ணாநகரில் மனைவி பிச்சையம்மாள் மற்றும் பிள்ளைகள் பாரதி, பார்கவி. முத்துப்பாண்டி, உள்ளிட்டோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அவருடைய மூத்த மகள் பாரதி அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதாக கூறப்படுகிறது இரண்டாவது மகள் பார்கவி பைலட்டாக இருக்கின்றார் மகன் முத்துப்பாண்டி மருத்துவர் ஆகிவிட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று உண்டாகி சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று மாலை இயற்கை எய்தி இருக்கிறார். இந்த நிலையில், அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெற இருக்கிறது செங்கல்பட்டு அண்ணாநகரில் இருக்கின்ற மின்மயானத்தில் இன்று மதியம் 12 மணியளவில் அவர் உடல் தகணம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.