சசிகலாவால் அடுத்தடுத்து அதிமுகவில் ஏற்ப்படும் பூகம்பம்!

0
170

ஒரு சில நாட்களாக சசிகலா அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களுடன் உரையாற்றி வருகிறார் அவர் உரையாடும் ஆடியோ வெளியாகி வருகின்றது. இதில் நோய்த்தொற்று முடிவடைந்தவுடன் நான் அரசியலுக்கு வருவேன் தருவேன் என்று சசிகலா உரையாடி இருக்கின்றார். இந்த விவகாரம் அதிமுகவினர் இடையே மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அதிமுகவில் புதுக்கோட்டை நகர இணைச் செயலாளர் பூரண ஆறுமுகம் என்பவரிடம் சசிகலா உரையாடி இருக்கிறார். அந்த சமயத்தில் ஆறுமுகம் நான் எம்ஜிஆர் கட்சி தொடங்கியது முதலே இந்த கட்சியில் இருந்து வருகின்றேன் தலைவரை நீக்கிய போதும், அம்மாவை சட்டசபையில் அவமானம் செய்தபோதும், மறியல் செய்து சிறைக்கு சென்று இருக்கின்றேன். நீங்கள் சிறைக்கு சென்ற சமயத்தில் அதே மனநிலையில் தான் இருந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு நீங்கள் விடுதலை ஆனதை வரவேற்று சுவரொட்டிகள் அடித்தேன் ஆனால் துரோகிகள் ஒன்று சேர்ந்து எங்களை வாழ விடவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இப்போதும் கூட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு நகர செயலாளர் உடன் நெருக்கமாக தான் இருக்கின்றேன் என்னுடைய மகன் செந்தில்குமார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பிரதிநிதியாக இருக்கின்றார். நீங்கள் கட்சிக்கு வருகை தரவேண்டும் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் ஆறுமுகம்.

அதன் பின்னர் உரையாற்றிய சசிகலா நிச்சயமாக வருகை தருவேன் கட்சியை சரிசெய்து அம்மா கொண்டு போனது போல நானும் கட்சியை எடுத்துச் செல்வேன். விரைவாக எல்லோரையும் நேரில் சந்திக்கிறேன் கட்சியை நன்றாக வளர்க்க வேண்டும் இதனால் தான் நான் ஆரம்பம் முதலே கட்சியில் இருப்பவர்களிடம் உரையாற்றி வருகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார் சசிகலா.

Previous articleஉங்க ஆதார் எண்ணை வைத்து எத்தனை பேர் நம்பர் வாங்கி இருக்காங்க! இதோ செக் பண்ணுங்க!
Next articleஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரி மரணம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here