நம்புங்க..! வெறும் 2 பொருட்களை வைத்து சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்யலாம்..!

Photo of author

By Priya

Jackfruit Ice Cream: பலரும் இந்த கோடைகால வெயிலை சமாளிக்க முடியாமல் உடல் குளிர்ச்சிக்காக பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் ஒரு சிலர்கள் பழங்களைக் கொண்டு ஜூஸ் போன்றவற்றை தயார் செய்து குடித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சுவையான மில்க் ஷேக் போன்ற பானங்களையும் தயார் செய்து குடித்து வருகிறார்கள்.

இந்த கோடை வெப்பநிலையை பொதுமக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் வீட்டிலேயே அனைவரும் முடங்கி கிடக்கிறார்கள். சில தாய்மார்கள் வீட்டில் இருக்கும் தங்களின் குழந்தைகளுக்கு ஏதாவது சுவையாகவும், எளிமையாகவும் பானங்களை செய்து கொடுக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி உண்ணும் ஒரு உணவு பொருள் என்றால் அது ஐஸ்கிரீம் தான். ஆனால் பெரும்பாலான மக்கள் அதனை கடைகளில் தான் வாங்கிக் கொடுப்பார்கள்.

இனி வீட்டிலேயே வெறும் இரண்டே பொட்களை (2 ingredient ice cream in tamil) வைத்து மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று நாம் இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்

  • பலாப்பழம் – 1கப்
  • தேங்காய் துருவல் – 1/2 கப்

செய்முறை

முதலில் நன்கு பழுத்த பலாப்பழச்சுளை எடுத்துக்கொண்டு அதில் இருக்கும் விதையை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதில் எந்தவித நார்பகுதியும் இருக்கக் கூடாது. அதன் பிறகு, அரைமூடி தேங்காயை எடுத்துக்கொண்டு அதனை சிறிது சிறிதாக துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரை மூடி தேங்காய் போதுமான அளவு. பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அரை மூடி தேங்காயை சேர்த்துக்கொண்டு நன்கு மைய அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காயிலிருந்து கெட்டியான தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு இந்த பலாப்பழச்சுளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேங்காய் பால் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அரைத்து வைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி இரண்டு மணி நேரம் பிரிட்ஜில் நன்றாக ப்ரீஷ் செய்ய வேண்டும். அதன் பிறகு ப்ரீஷ் செய்த கலவையை மீண்டும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்து வைத்த கலவையை மீண்டும் 2 மணி நேரம் ப்ரீஷ் செய்ய வேண்டும். இதுபோல இரண்டு மூன்று தடவை பிரிட்ஜில் ப்ரீஷ் செய்து அதனை மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக அதனை ஒரு இரவு முழுவதும் ப்ரீஷ் செய்து மறுநாள் ஒரு கரண்டியில் ஸ்கூப்பாக எடுத்தால் சுவையான பலாப்பழம் தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் தயார்.

குறிப்பு: இதற்கு நீங்கள் சர்க்கரை, தேன் சேர்த்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் பலாப்பழத்தில் உள்ள இனிப்பு போதுமான அளவு ஒருவேளை உங்களுக்கு கூடுதலாக இனிப்பு வேண்டும் என்று நினைத்தால் இதில் நீங்கள் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: Mango Halwa Recipe in Tamil: ரொம்ப ஈஸியான இந்த மாம்பழ அல்வா ட்ரை பண்ணுங்க..!