கோவில் ஓய்வூதியர்களுக்கு “ஜாக்பாட்”!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

கோவில் ஓய்வூதியர்களுக்கு “ஜாக்பாட்”!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

CineDesk

“JACKPOT” FOR TEMPLE PENSIONERS!! Notification released by Tamil Nadu Govt.

கோவில் ஓய்வூதியர்களுக்கு “ஜாக்பாட்”!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் பணியாற்றி வந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளி வந்துள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மணிவாசன் கூறி இருப்பதாவது, கோவில் பணியாளர்களின் ஓய்வூதிய தொகையானது ஒவ்வொரு மாதமும் மூன்றாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது ஓய்வூதியர்களுக்கான மாத சம்பளத்தை மூன்றாயிரம் ரூபாயில் இருந்து நான்காயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும், கோவிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கான ஓய்வூதிய தொகையானது 1500 ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் பணியாற்றிய கோவில்களிலேயே அனைத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் கருணைத்தொகையாக ஓய்வூதியர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இந்த இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பு உடனடியாக தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.