அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! குழந்தை பெற்று கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும்! 

Photo of author

By Parthipan K

அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! குழந்தை பெற்று கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும்! 

Parthipan K

jackpot-hit-by-women-working-in-the-government-sector-if-you-have-a-child-you-will-get-a-special-pay-rise

அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! குழந்தை பெற்று கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும்!

சீனா தான் உலகில் அதிக அளவில் மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது.அதற்கு அடுத்ததாக இந்தியா உள்ளது. இருப்பினும் இந்தியாவில் உள்ள சிக்கிம் என்ற மாநில தான் குறைந்த மக்கள் தொகையை கொண்ட மாநிலமாக உள்ளது. இந்த மாநிலத்தில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகின்றது.

அதனால் அரசு அதனை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக அரசு துறையில் பணிபுரிந்து வரும் பெண்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதனை தொடர்ந்து இரண்டு குழந்தைகள் பெற்ற பெண்கள் மூன்றாவது குழந்தை பெற்று கொண்டால் மீண்டும் அவர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பாக சிக்கிம் மாநிலத்தை பொறுத்தவரை பிறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது. அதனால் மக்கள் தொகையும் குறைந்து வருகின்றது. அதன் காரணமாகவே இது போன்ற நடவடிக்கையின் மூலமாக பிறப்பு  விகிதத்தை அதிகரிக்கலாம் என இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என அம்மாநில முதலவர் அறிவித்துள்ளார்.