மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. வரப்போகுது 1000!! ரேஷன் அட்டையின் புதிய அப்டேட்!!
மகளிர்களுக்கான உரிமை தொகை திட்டமானது திமுக ஆட்சிக்கு வந்து நடைமுறைப்படுத்தியது.இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர்.இருப்பினும் ஒரு சிலர் இதற்கு தகுதியடைந்தும் அவர்களுக்கு மகளிர் உரிமை கிடைக்கவில்லை.மேற்கொண்டு இவர்களுக்கு உரிமைத் தொகை புதிதாக வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அதுமட்டுமின்றி மறுவாழ்வு முகாம்களில் வாழும் பெண்கள் மற்றும் அரசு வேலை ஊழியர்களின் மனைவிகள் உள்ளிட்டோருக்கும் இப்பணம் கிடைக்க வழி வகுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.அந்த வகையில் இதற்கான அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகளின் காரணத்தினால் வெளியிடப்படாமல் இருந்தது.தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து விட்டதால் நடத்தை வீதிகள் நாளையுடன் முடிவடைய உள்ளது.இந்த வாரம் இறுதிக்குள் புதிதாக மகளிர் உரிமைக்காக விண்ணப்பிப்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அரசியல் வட்டாரத்திலும், அடுத்த மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகையானது புது முகமுடையவர்கள் மற்றும் மறுவாழ்வு பெண்களுக்கு வழங்கப்படும் என ஆலோசனை செய்வதாக கூறியுள்ளனர்.மேற்கொண்டு உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் கட்டாயம் இம்முறை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.அதேபோல ரேஷன் அட்டை-க்கு ஒப்புதல் வழங்கி விநியோகம் செய்யாமல் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.அவர்களுக்கும் இம்முறை விநியோகம் செய்யப்படும் என்றும் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.