‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்’… யாரை சொல்லுகிறார் ஜடேஜா?… ரசிகர்கள் குழப்பம்

0
240

‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்’… யாரை சொல்லுகிறார் ஜடேஜா?… ரசிகர்கள் குழப்பம்

சி எஸ் கே அணி வீரர் ஜடேஜாவுக்கும் அணி நிர்வாகத்துக்கும் கருத்து மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. தோனி, ஜடேஜாவை சுதந்திரமாக செயல்பட விடாததால் அவருக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகவும் சொல்லப்பட்டது. கடைசி சில போட்டிகளை ஜடேஜா விளையாடாதது மேலும் சந்தேகங்களைக் கிளப்பியது.

இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம், சமூகவலைதளங்களில் ஜடேஜாவை பின் தொடர்வதை நிறுத்தியது. அதுபோல சி எஸ் கே சம்மந்தமான பதிவுகளை ஜட்டு நீக்கினார். இதனால் அவர் தொடர்ந்து சி எஸ் கே அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது ஜடேஜா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வைத்துள்ள ஸ்டெட்டஸ் மறைமுகமாக சி எஸ் கே அணியை குறிப்பிடுவது போல அமைந்துள்ளது. அதில் “ யாருக்காகவும் உங்கள் தரத்தை குறைத்துக் கொள்ளாதீர்கள். சுயமரியாதைதான் எல்லாமே.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous articleதூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஐந்து கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை!
Next articleகுடி போதை தலைக்கேறியதால் சைக்கோவாக மாறிய சைத்தான்!?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here