பழைய பகையை மறந்து சஞ்சய் மஞ்சரேக்கரிடம் கூலாக பேசிய ஜட்டு… ரசிகர்கள் பாராட்டு!
இந்திய வீரர் ரவிந்தர ஜடேஜாவை கடுமையாக விமர்சித்து கண்டனங்களைப் பெற்றவர் சஞ்சய் மஞ்சரேக்கர்.
ஆகஸ்ட் 28 அன்று, துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய கோப்பை 2022 போட்டியில், இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. ஒளிபரப்புக் குழுவின் உறுப்பினரான முன்னாள் இந்திய பேட்டர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஆட்டம் முடிந்த சிறிது நேரத்திலேயே ரவீந்திர ஜடேஜாவை நேர்காணல் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் “என்னுடன் இங்கே ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். முதல் கேள்வி ‘நீங்கள் என்னுடன் பேச சம்மதமா ஜட்டு?’ எனக் கேட்டார். அதற்கு ஜடேஜா ‘ஆமாம், கண்டிப்பாக. என்னிடம் இல்லை. எந்த பிரச்சனையும்,’ என்று புன்னகையுடன் பதிலளித்தார்.
இந்த உரையாடல் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. அதற்குக் காரணம் முந்தைய காலங்களில் மஞ்சரேக்கர், ஜடேஜாவை மோசமாக விமர்சித்து அவரின் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட்வர். மஞ்ச்ரேகர் 2019 ஜட்டுவை “துண்டு துக்கடா” வீரர் என்று அழைத்ததில் இருந்து இது தொடங்கியது. “50 ஓவர் கிரிக்கெட்டில் ஜடேஜாவைப் பற்றி பேசும் போது துண்டு துக்கடா வீரர்களுக்கு நான் பெரிய ரசிகன் அல்ல. டெஸ்ட் போட்டிகளில், அவர் ஒரு நல்ல பந்துவீச்சாளர். ஆனால் 50 ஓவர் கிரிக்கெட்டில், அவரை பேட்ஸ்மேனாகவோ பவுலரகாகவோ கருத மாட்டே” என்று அவர் கூறினார். அதற்கு ஜடேஜாவும் காட்டமாக பதிலளித்திருந்தார். இது சம்மந்தமாக இருவருக்கும் இருந்த கசப்புகளை மறந்து இருவரும் நேற்று உரையாடினர்.