இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடருக்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ஐசிசி ஆடவர் டெஸ்ட் தொடருக்கான பேட்ஸ்மேன்,பவுலர் மற்றும் ஆல் ரவுண்டர் என தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.
ஐசிசி வெளியிட்ட இந்த தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன் பட்டியலில் தொடர்ந்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அதே இங்கிலாந்து அணியை ஹாரி ப்ரூக் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் கெயின் வில்லியம்சன் ,இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 4 வது இடத்திலும்,ரிஷப் பண்ட் 5 வது இடத்திலும் உள்ளார்.
ஆல்ரவுண்டர் பட்டியலில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து மார்கோ ஜான்சன்,ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். முதல் இடத்தில் உள்ள ஜடேஜா 423 புள்ளிகளும் இரண்டாவது இடத்தில் உள்ள ஜான்சன் 291 புள்ளிகள் பெற்றுள்ளார்.
முதல் இடத்திற்கும் இரண்டாவது இடத்திற்கும் 132 புள்ளிகள் வித்தியாசத்தில் ஜடேஜா ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார் ஜடேஜா. ஆஸ்திரேலியா அணியுடனான இரண்டாவது போட்டிக்கு தீவிர வலை பயிற்சிமேற்கொண்டு வருகிறார்