திட்டம் போட்டு தூக்கிய கம்மின்ஸ்..விக்கெட்டை பறிகொடுத்த ஜடேஜா!! டிரா செய்யுமா இந்தியா??

Photo of author

By Vijay

cricket: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா மெதுவாக ரன்கள் சேர்த்து வந்த நிலையில் திட்டம் போட்டு தூக்கிய பேட் கம்மின்ஸ்.

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் 3 வது போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா நிதானமாக ரன் சேர்த்து வந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க இன்னும் 25 ரன்கள் தேவை என்ற நிலையில் பும்ப்ரா மற்றும் ஆகாஷ் தீப் களத்தில் விளையாடி வருகின்றனர்.

இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் 2 போட்டிகள நடந்து முடிந்தது. இந்த இரு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளும் அதிக முனைப்போடு இந்த போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 3 வது போட்டி தற்போது கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா அணி முதல் இனிங்க்சில் 445 ரன்கள் அடித்தது. இந்திய அணி களமிறங்கி தற்போது 9 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களில் உள்ளது. இதில் முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் தொடக்கக் வீரர் கே எல் ராகுல் 84 ரன்கள அடித்து ஆட்டமிழந்தார். பின் களமிறங்கிய ஜடேஜா சிறப்பாக விளையாடி வந்தார்.

பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் அட்டாக் செய்ய நினைத்து அடித்த மிட்செல் மார்ஷ் கேட்ச் பிடித்து ஆட்டமிழந்தார். தற்போது ஒரு விக்கெட் மட்டும் மீதமுள்ள நிலையில் திணறி வருகிறது இந்திய அணி. இந்திய அணி இந்த தொடரில் மொத 5 போட்டிகளில் 4 போட்டிகளை வெற்றி பெற்றால் மட்டும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.