நண்பரை எலும்பாக மாற்றிய ஜடேஜா! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்!
கிரிக்கெட் உலகில் ரவீந்திர ஜடேஜா விற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் முதன்முதலில் 2008 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் விராட் கோலியின் தலைமையில் கலந்துகொண்டு கோப்பை வென்றார். அதனையடுத்து 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக போட்டியில் இறங்கி மக்கள் முன்னிலையில் அறிமுகமானார். மேலும் 2012ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.
பிறகு சூதாட்டம் என்ற புகாரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்கிக்கொண்டதால் இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. அச்சமயம் ரூ 9.5 கோடி ரூபாய்க்கு குஜராத் கயன் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. இவர் இடது கை பழக்கம் உள்ளவர். அதுமட்டுமின்றி ஜனவரி 2017 ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஒரு நாள் போட்டியில் சாம்பியன் இலங்கையை வீழ்த்திய போது 150 இலக்குகளை வீழ்த்திய முதல் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
கிரிக்கெட் உலகில் இவருக்கு என்ற பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது நடந்து முடிந்த சென்னை சூப்பர் கிங்ஸில் இவரது பங்கு பெறும் வாரியாக இருந்தது. இவர் தனது செயல்பாடுகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்பொழுது திரையுலகில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் அதிகளவு வெற்றியடைந்தது.அந்த படத்தின் மாஸ் வசனத்தை இவர் கூறுவது போல வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகளவு வைரலானது.
அதனையடுத்து தற்பொழுது ஒரு எலும்புக்கூட்டின் மீது கை போட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது என் நண்பன் டயட் க்கு பிறகு இப்படி மாறி விட்டார் என்று கேளிக்கையாக ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை அப்லோட் செய்துள்ளார். இவரது ரசிகர்கள் அந்த போஸ்டை லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்.