ஜெய்பீம் திரைப்படத்தின் 2 வது பாகம் கண்டிப்பாக எடுக்‍கப்படும் – இணை தயாரிப்பாளர் உறுதி 

Photo of author

By Parthipan K

ஜெய்பீம் திரைப்படத்தின் 2 வது பாகம் கண்டிப்பாக எடுக்‍கப்படும் – இணை தயாரிப்பாளர் உறுதி 

Parthipan K

Jai Bhim 2

ஜெய்பீம் திரைப்படத்தின் 2 வது பாகம் கண்டிப்பாக எடுக்‍கப்படும் – இணை தயாரிப்பாளர் உறுதி

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நடிகர் சூர்யாவின் “ஜெய்பீம்” திரைப்படத்தின் 2வது பாகம் கண்டிப்பாக எடுக்‍கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஞானவேல் இயக்‍கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. மேலும், பல விருதுகளையும் அள்ளிக்‍குவித்தது.

தற்போது நிறைவடைந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில், ஜெய்பீம் படம் திரையிடப்பட்டது. இதில், இயக்‍குநர் ஞானவேல், நடிகர்கள் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய 2டி தயாரிப்பு நிறுவனத்தின் இயக்‍குநரும், இணை தயாரிப்பாளருமான ராஜசேகர் பாண்டியன், ஜெய்பீம்-2 படம் கண்டிப்பாக எடுக்‍கப்படும் என உறுதியளித்தார்.