வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த சான்றை இனி ஆன்லைனிலேயே பெற்று கொள்ளலாம்!

வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த சான்றை இனி ஆன்லைனிலேயே பெற்று கொள்ளலாம்!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா ,கேரளா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கான வணிக வாகனங்கள் ,சுற்றுலா செல்லும் வாகனங்கள் என தமிழகத்திற்கு வருகின்றது.

இதற்காக தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் 22 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது அங்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு தற்காலிகமாக அனுமதி வழங்கப்படும்.அனுமதி பெற்ற பின்னரே வாகனங்கள் தமிழகத்திற்குள் பயணம் செய்ய போக்குவரத்து துறை அனுமதி அளிக்கும்.

முன்னதாக இவ்வாறு அனுமதி சான்றுகள் இல்லாத நிலையில் பல்வேறு வகையில் முறைகேடுகள் நிகழ்ந்தது.தமிழகத்திற்குள் பயணம் செய்வதற்கென நிர்ணயம் செய்த கட்டணத்தை காட்டிலும் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டது என புகார் எழுந்தது.

இந்நிலையில் தமிழகத்த்தில் சோதனையின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் தற்காலிக அனுமதி பெரும் நடைமுறை தமிழக அரசு தொடங்கி வைத்தது. இதனால் லட்சக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் ,சரக்கு வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் பயன்பெற்று வருகின்றனர்.

கடந்த மாதம் சோதனை முறையில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது அனைத்து சோதனை சாவடிகளில் விரிவு படுத்தப்பட்டுள்ளது.மேலும் கட்டணம் செலுத்திய பிறகு விண்ணப்பிக்கும் போது ரசீது தானாகவே கியூஆர் குறியீட்டுடன் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தற்போது கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு இவை பெரிதும் உதவியாக இருக்கும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளனர்.